Welcome Guest. Sign in or Signup

2 Answers

ஆங்கிலம்

Asked by: 378 views பொதுவானவை

ஆங்கிலம் படிக்கச் நல்ல வெப் சைட் எதாவது சொல்லுங்க.ப்ளீஸ்

2 Answers



  1. +1 Votes Thumb up 1 Votes Thumb down 0 Votes



  2. sakthyV on Dec 10, 2013 Reply

    சில டிப்ஸ்………
    ஆங்கிலத்தை ஆசிரியர் இல்லாது,புத்தகங்கள் அல்லது இணையத் தளங்கள் மூலம் கற்பதற்கு முன்னர் சிலவற்றை முறைப்படுத்திக் கொள்ள வேண்டும்.தமிழ் மூலம் அல்லது சுலபமாக இருக்கிறது என உடனே தொடங்கி விடக் கூடாது.

    முதலில் நம்மிடமுள்ள அடிப்படை ஆங்கில மொழி அறிவு என்ன? ஆரம்பம் அல்லது ஓரளவிற்கு தெரிந்துள்ளோமா என்பதை முடிவு செய்ய வேண்டும். அதை வைத்துக் கொண்டு புத்தகம் அல்லது இணையப் பக்கத்தைக் கண்டறிய வேண்டும். ஒரு மொழியைப் படிக்க இன்று ஏராளமான இணையத் தளங்கள் உண்டு. சில தமிழ் மூலம் மற்றவை ஆங்கில மூலம். எப்போதும் தமிழ் மூலம் உள்ளவற்றை ஒரு உதவியாகக் கொள்ள வேண்டுமே தவிர,அதை அப்படியே படிக்கத் தொடங்கக் கூடாது.

    அடுத்து நமது இலக்கு என்ன? இலக்கணம் படிப்பதா,பேசக் கற்றுக் கொள்வதா அல்லது பொதுவாக முழுவதையுமா?
    அதை வைத்துக் கொண்டு தொடங்க வேண்டும்.முதலில் இலக்கணத்தை தொடக் கூடாது. தொடர் பகுதி வசனங்களை தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது அதிக phrase களை தெரிந்து கொள்ள வேண்டும். அதன் பின்னர் அதில் இலக்கணத்தை சேர்க்க வேண்டும்.

    The house at the end of the street , இப்படி பலவற்றை கற்று,இதனுடன் noun ,verb சேர்த்து வசனங்களை உருவாக்கலாம்.

    பேசக் கற்றுக் கொள்ளும் போது அதிக கவனம் தேவை.காரணம் நம் தமிழ் நாட்டில் அதிகமாக ஆங்கில உச்சரிப்பு தவறாக உச்சரிக்கப்படுகிறது. Server -சர்வர், school -ஸ்கூல் என அழுத்தி, water-வாட்டர் இப்படி சிலவற்றை சொல்லலாம். அதனால் british அல்லது american accent எதுவானாலும் சொற்களின் உச்சரிப்பை வாய் அசைப்பை கவனித்து பழகுவது சிறந்த முறையாகும்.அதனால் ஆங்கிலம் மூலம் படிப்பது பேச்சு பயிற்சிக்கு அதிக பலன் தரும்.

    +1 Votes Thumb up 2 Votes Thumb down 1 Votes


Answer Question

Heads up! You are attempting to upload an invalid image. If saved, this image will not display with your comment.

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

You can add images to your comment by clicking here.